உடுமலை; தேவனூர் புதூரில் நாளை (6ம் தேதி) மின்தடை
Tirupur News- உடுமலை, தேவனூர் புதூரில் நாளை மாதாந்திர பணிகள் காரணமாக, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது,;
Tirupur News,Tirupur News Today- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், உடுமலை அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேவனூர்புதூர் துணை மின் நிலைய பகுதியில், நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. ஆகவே நாளை (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தேவனூர் புதூர் துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்க முத்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அப்போது மின் பாதையின் அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.