உடுமலை நகராட்சிக்கு புதிய ஆணையர் பொறுப்பேற்பு

உடுமலை நகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்றுள்ளார்.;

Update: 2021-11-23 01:45 GMT

உடுமலை நகராட்சி புதிய ஆணையர் சத்தியநாதன்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி, சில மாதங்களுக்கு முன், நீலகிரி மாவட்டம்,குன்னூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சியில் பணியாற்றி வந்த சத்தியநாதன், உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், முறைப்படி, பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News