உடுமலை அரசுப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

உடுமலை அரசுப்பள்ளியில் குடியரசு தினவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.;

Update: 2022-01-26 04:45 GMT

உடுமலை அரசு பள்ளியில், தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது.

உடுமலைபேட்டை, பாரதியார் நுாற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில், பள்ளி முதுகலை ஆசிரியர் சிவகுமார், தேசியக்கொடி ஏற்றினார். தமிழாசிரியர் வே.சின்னராசு, குடியரசு தினத்தின் பெருமைகளை விளக்கினார்.

முதுகலை ஆசிரியர் இனியன் ஞானபிரகாசம், பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் பேசினர். இசை ஆசிரியை கெஜலட்சுமி மற்றும் மாணவியர், தேசபக்தி பாடல் பாடினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஆர்.ராஜேந்திரன், வே.தைலியண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Tags:    

Similar News