உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி
உடுமலை, திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில், இன்று, முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.;
உடுமலை, திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையில், உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. பாதுகாப்பு கருதி, வழிபாடு, பூஜைகள் நிறுத்தப்பட்டன. பக்தர்களுக்கும், அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது சூழ்ந்திருந்த வெள்ளம் வடிந்து, இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் வலியறுத்தினர். அவர்களது கோரிக்கையை ஏற்று, மீண்டும் பூஜை, வழிபாடு நடத்தப்பட உள்ளது. பக்தர்கள், தரிசனத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.