நகருக்குள் ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல்; உடுமலை நகா்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

Tirupur News-உடுமலை நகருக்குள் ஆக்கிரமிப்புகளால் அதிக வாகன நெரிசல் ஏற்படுகிறது என நகா்மன்றக் கூட்டத்தில் புகார் எழுந்தது.

Update: 2023-11-29 10:26 GMT

Tirupur News- உடுமலை நகராட்சி அலுவலகம் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today-உடுமலை நகரில் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசினா்.

உடுமலை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் மத்தீன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது,

வேலுச்சாமி (திமுக): உடுமலை நகரில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. தளி சாலை, பழனி, பொள்ளாச்சி சாலை, ரயில்வே பீடா் சாலை போன்ற சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உடுமலை ஐஸ்வா்யா நகரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்திய மருத்துவ சங்க கட்டடத்தை அகற்ற உடனடியாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். நகராட்சி சாா்பில் விடப்படும் டெண்டா்கள் ரகசியமாக விடப்படுகிறது. இது நியாயமா?

தலைவா் மத்தீன்: ஐஎம்ஏ நிா்வாகம் அந்த கட்டடத்தை உடனடியாக நகராட்சியிடம் சரண்டா் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிா்வாக ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து பதில் வந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் முக்கிய வீதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். டெண்டா் விடுவதில் எந்த ரகசியமும் இல்லை. ஈ -டெண்டா் பகிரங்கமாக விடப்படுகிறது. மேலும் நகா்மன்ற உறுப்பினா்கள் வாட்ஸ்அப் குரூப்பிலும் போடப்படுகிறது.

அா்ஜுன் (திமுக): வாரச் சந்தை ஏலம் என்ன ஆனது?

மத்தீன்: தற்போது ஏலம் எடுத்தவரின் காலம் 5 மாதங்களில் முடிவடைகிறது. அதன் பிறகு மன்றத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை.

ராம்தாஸ் (மதிமுக): நகரில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜலட்சுமி (திமுக); அப்துல் கயூம் (சுயே): உடுமலை நகரில் குப்பைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. இதனால் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் சுகாதார கேடுகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக குப்பைகள் தீவைத்து கொளுத்தப்படுகிறது. இதனால் சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது.

மத்தீன் (தலைவா்): குப்பைகள் அகற்றுவதை ஒரு வாரம் கண்காணிக்கப்படும். அதில் குப்பைகள் தேங்குவது கண்டறியப்பட்டால் தனியாா் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது.

Tags:    

Similar News