உடுமலை; கிளுவங்காட்டூா், கோட்டமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை
Tirupur News,Tirupur News Today- உடுமலையை அடுத்த கிளுவங்காட்டூா், கோட்டமங்கலம் துணை மின் நிலையங்களில், பராமரிப்பு பணி நடப்பதால், நாளை மின் விநியோகம் இருக்காது.;
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியை அடுத்துள்ள கிளுவங்காட்டூர், கோட்டமங்கலம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில், நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மின்வாரிய செயற்பொறியாளா் மூா்த்தி கூறியிருப்பதாவது,
உடுமலையை அடுத்த கிளுவங்காட்டூா் துணை மின் நிலையம், கோட்டமங்கலம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால், நாளை 8-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
கிளுவங்காட்டூா் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்;காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
கிளுவங்காட்டூா், எலையமுத்தூா், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதி நகா், கோவிந்தாபுரம், அமராவதி நகா் செக்-போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூா் மற்றும் ஆலாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
கோட்டமங்கலம் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்:காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.