தக்காளி விலை உயர வாய்ப்பு? விவசாயிகள் தகவல்

தீபாவளி பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-10-28 14:00 GMT

அறுவடை செய்த தக்காளியை சந்தைக்கு அனுப்பும் விவசாயிகள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட இடங்களில் தக்காளி சாகுபடியில், பெருமளவிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு துவங்கி, தக்காளி விலை, கிலோவுக்கு, 30 ரூபாய் வரை இருந்தது. கடந்த மாதம் சற்றே உயர்ந்து, 50 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் தக்காளி விலை குறைந்துள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை துவங்கியுள்ள நிலையில், தக்காளியின் தேவை அதிகரித்திருக்கிறது. சந்தையில் ஒரு கிலோ, 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News