தக்காளி விலை மீண்டும் குறையுது

உடுமலை சந்தைக்கு, தக்காளி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்துள்ளது.;

Update: 2022-01-08 10:30 GMT

பைல் படம்.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. உற்பத்தியாகும் தக்காளியை, உடுமலை நகராட்சி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்து, ஏல முறையில் விற்கின்றனர். வட கிழக்கு பருவ தீவிரமடைந்துள்ள நிலையில், தக்காளிச்செடிகள் மற்றும் காய்கள் பாதித்து, வரத்து பெருமளவு சரிந்தது.

இதனால், கடந்த மாதம், தக்காளி விலை உச்சத்தை தொட்டது. 14 கிலோ கொண்ட, ஒரு பெட்டி, ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏலம் போனது. தற்போது மழை குறைந்து, சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளதால், தக்காளி வரத்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. உடுமலை சந்தைக்கு சராசரியாக, 7 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து காணப்படுகிறது.

தற்போது தக்காளி விலை குறைந்துள்ளது. நேற்று, கொடி தக்காளி, ஒரு பெட்டி, 450 ரூபாய் வரையிலும், செடி தக்காளி ஒரு பெட்டி, 300 முதல் 350 ரூபாய் வரை ஏலம் போனது.

Tags:    

Similar News