வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை; ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தல்

Tirupur News,Tirupur News Today- உடுமலை பகுதியில் நடந்துவரும் வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, அரசுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வலியுறுத்தினார்.

Update: 2023-03-19 10:22 GMT

Tirupur News,Tirupur News Today- உடுமலை நகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்தது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது,

உடுமலைப்பேட்டை நகராட்சியில் குடிநீர், பொதுமக்களுக்கு தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மேல்நிலைத்தொட்டி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை நகராட்சி நிர்வாகம் மூலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, நகராட்சி பகுதியில் அனைத்து இடங்களுக்கும் தங்கு தடையின்றி போதுமான அளவு குடிநீர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். திருமூர்த்தி அணையிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், இந்த ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அந்த பணிகள் குறித்தும், அலசி ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

2022-2023 ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செய்து முடித்தால் தான் அடுத்த பணிகளை செய்து முடிக்க வாய்ப்புகளாக அமையும். உடுமலைப்பேட்டை நகராட்சியின் சார்பாக, வடிகால் அமைக்கும் பணிகளை காலதாமதம் ஏற்படாமல் விரைந்து முடிக்கவும், மேலும், மின்சார வாரியத்தின் சார்பில் பழுதடைந்த மின்கம்பிகளை, மின்கம்பங்களை எல்லாம் மாற்றியமைக்கவும், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பழுதடைந்த சாலைகளை எல்லாம் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்வதில் காலதாமதம் இருக்க கூடாது என்பதால், அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். இப்பணிகளை தொய்வின்றி, இயன்றவரை விரைவாக செய்து முடிக்க வேண்டும். 

மேலும் கோடை காலமாக இருப்பதால் ஏற்கனவே வழங்கப்படுகின்ற குடிநீரினை எந்தவித தடைகளும் இன்றி பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். கோடை காலத்தில், குடிநீர் பற்றாக்குறை என்ற பாதிப்பு மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், நாம் மிகுந்த கவனமாக இருந்து செயல்பட வேண்டும். அதற்கேற்ற வகையில், முன் ஏற்பாடுகளையும், தேவையான நடவடிக்கைகளையும் எடுப்பது மிக முக்கியம். 

மேலும் வருகின்ற மானிய கோரிக்கையில் நிதிநிலையறிக்கை சமர்பித்தவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். அதற்குள் நமது மாவட்டத்தில் முடிக்க வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க அனைத்து துறை அலுவலர்களையும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், உடுமலைப்பேட்டை நகராட்சி தலைவர் மு.மத்தின், மண்டலஇணை இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) வி.ராஜன், உடுமலைப்பேட்டை நகராட்சிஆணையாளர் சத்யநாதன், மண்டலப்பொறியாளர் பாலச்சந்திரன், முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News