உடுமலை; சின்னாறில் மலைவாழ் மக்கள் தொடர்பு முகாம்
Tirupur News, Tirupur News today-திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள சின்னாறில் மலைவாழ் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
Tirupur News, Tirupur News today- உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளது. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், மாவட்ட, குழிப்பட்டி, குறு மலை, மேல் குருமலை, காட்டுப்பட்டிகருமுட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
நீண்ட காலமாக, வனப்பகுதிகளில் வசிக்கும் இம்மக்களுக்கு, போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அடிக்கடி காட்டுத்தீ போன்ற பாதிப்புகளையும் சந்திக்கின்றனர். பாம்புகள், யானை நடமாட்டம் போன்ற பாதுகாப்பற்ற வாழ்க்கை சூழலில், இவர்கள் வாழ்கின்றனர். பொருளாதார ரீதியாக, மிகவும் பின்தங்கிய நிலையில், இங்குள்ள குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள், வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது.
இவர்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய தேவைகள் வனத்துறைமற்றும் வருவாய்துறையினர் சார்பில் செய்து தரப்படுகிறது. ஆனாலும் முழுமையாக பூர்த்தி அடையாததால், பொருளாதார ரீதியாக உயர்வு அடையாமல் பின் தங்கியே உள்ளனர். இந்த சூழலில் மலைவாழ் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சின்னாறில் மலைவாழ் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டது.
முகாமிற்கு உடுமலை ஆர்.டி.ஓ.ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார்.அப்போது புதிய மின்னணு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, ஆதார் அட்டை, பிறப்பு இறப்பு சான்று, மருத்துவ முகாம், ஆதார்எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது உள்ளிட்டபல்வேறு சேவைகள் மலைவாழ் மக்களுக்கு செய்து தரப்பட்டது. மேலும், வனத்துறை சார்பில் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாம்களில் பல்வேறு மலைவாழ் குடியிருப்புகளைச் சேர்ந்த ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர்.
இதில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன், குடிமைப் பொருள் தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியம், கேபிள் டி.வி. தாசில்தார் ரவீந்திரன், எரிசனம்பட்டி மருத்துவ அலுவலர் உமாராணி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.