தோட்டத்து வீட்டில் தீ விபத்து; ரூ. 1.5 லட்சம், 15 பவுன் நகைகள் தீக்கிரையான சோகம்

tirupur News, tirupur News today-உடுமலை அருகே தோட்டத்து வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பீரோவில் இருந்த ரூ.1.5 லட்சம் பணம், 15 பவுன் தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகியது.

Update: 2023-03-13 01:58 GMT

tirupur News, tirupur News today- திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தீ விபத்தில் எரிந்து கருகிய தோட்டத்து வீடு. 

tirupur News, tirupur News today- உடுமலையை அடுத்த அந்தியூர் சடையக்கவுண்டன்புதூர் பகுதியில் தோட்டத்தில் உள்ள ஓட்டு வீட்டில் லட்சுமணன் (வயது 48) என்பவர் குடும்பத்துடன் வசித்தார். விவசாயம் செய்து வந்தார்.  கோவில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் இந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு கொளுந்து விட்டு எரிந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதனைப் பார்த்து உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பலத்த போராட்டத்துக்குப் பிறகு, தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வீட்டின் மேற்கூரை மற்றும் பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. 

இந்த தீ விபத்தில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.1.5 லட்சம் பணம், 15 பவுன் நகைகள் கருகியது. மேலும் நிலப்பத்திரம், ஆதார் அட்டைகள், பான் கார்டுகள், ரேஷன் அட்டைகள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், பிறப்பு, இறப்பு, வாரிசு சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டைகள், டிராக்டர், மொபட் பதிவுச் சான்றிதழ்கள், ஏ.டி.எம். அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தீயில் கருகியது.

இதுதவிர டி.வி., பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், கட்டில்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகியது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் வீட்டுக்கு தீ வைத்து சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கவனம் அவசியம்

தீ விபத்துகளை பொருத்தவரை பெரும்பாலும் கவனக்குறைவே  முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக, கோடை காலத்தில் அதிகளவில் தீ விபத்துகள் நடப்பது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக, வெப்பத்தின் தாக்கம் காரணமாக, மின்விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. தொடர்ந்து, பல மணி நேரங்கள் அதிக ஆற்றலில் மின் பயன்பாடு இருக்கும் தொழிற்சாலைகளில், தொழில் நிறுவனங்களில் மின்கசிவு காரணமாக, தீ விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக, கூறப்படுகிறது. எனவே, கூடுதல் கவனத்துடன் இருந்தால் மட்டுமே, இதுபோன்ற தீ விபத்துகளை தவிர்க்க முடியும்.

Tags:    

Similar News