அச்சுறுத்தும் டெங்கு கொசு மருந்து தெளிப்பு
உடுமலை நகராட்சிப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க, கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.;
உடுமலை நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அரசு மருத்துவமனை, மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது. நகராட்சி ஆணையர் மேற்பார்வையில் இப்பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். கொசு உற்பத்தி ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் வீட்டின் முகப்பில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.