உடுமலைப்பேட்டை அருகே மாநில அளவிலான கபடி போட்டி

உடுமலைப்பேட்டை அருகே மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

Update: 2023-05-14 15:53 GMT

கபடி விளையாட்டு (கோப்பு படம்).

உடுமலைப்பேட்டை அருகே மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையை அடுத்த போடிபட்டியில் மாநிலம் தழுவிய தொடர் கபடி போட்டி நடைபெற்றது. போட்டிகளை தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.நேற்று முன்தினம் தொடங்கிய போட்டி நேற்று இரவு வரையிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது.போட்டியில் பங்கேற்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் வருகை தந்திருந்தனர்.

மழை வருவது போல் இருந்ததால் கொட்டகை அமைக்கப்பட்டு செயற்கை ஆடுகளத்தில் போட்டிகள் நடைபெற்றது. இதில் வீரர்கள் ஆக்ரோசத்துடன் சீறிப்பாய்ந்து சென்று எதிர் அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்றனர். பார்வையாளர்கள் விசில் அடித்தும் கைதட்டியும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.முதல் பரிசாக ரூ. 20ஆயிரம் 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரம் , 3-ம் பரிசாக 10 ஆயிரம், 4-ம் பரிசாக 7ஆயிரமும் வழங்கப்பட்டது. அத்துடன் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

போட்டிக்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து இருந்தனர். உடுமலை சுற்றுப்புற பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் கபடி போட்டி நடைபெற்று வருவதால் விளையாட்டுக்கள் மீதான ஆர்வம் மற்றும் விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

கபடி தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு ஆகும். எந்த விதமான உபகரணங்களும் இல்லாமல் முழுக்க முழுக்க உடல் வலு மற்றும் போட்டிக்கான தொழில்  நுட்ப அறிவின் அடிப்படையில் இது நடைபெறும் விளையாட்டு என்பதால் கபடி தற்போது சர்வதேச அளவில் விளையாடப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியிலும் கபடியை சேர்ப்பதற்கான முயற்சிகள் இந்திய அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News