உடுமலையில் ஸ்ரீசத்ய சாய் பாபா பிறந்த தினம்
உடுமலை, டிவி பட்டணத்தில் உள்ள ஸ்ரீ சத்திய சாயி சேவா சன்னதியில், சத்ய சாய் பாபாவின், 96வது பிறந்த நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன;
உடுமலை, டிவி பட்டணத்தில் உள்ள ஸ்ரீ சத்திய சாயி சேவா சன்னதியில், சத்ய சாய்பாபாவின், 96வது பிறந்த நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஓம்கார சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், சகஸ்ரநாம அர்ச்சனை நிகழ்ச்சிகள் நடந்தன. பிறகு, சத்ய சாய் பாபாவுக்கு, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சத்திய சாயி பஜனை பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்கள், மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். 'சாமியின் அவதார மகிமை' என்ற தலைப்பில், திருப்பூர் காந்திநகர் சத்திய சாயி சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் செல்வி, சொற்பொழிவாற்றினார். சத்திய சாய்பாபாவின், ஆன்மிக வரலாறு குறித்து பக்தர்கள் சொற்பொழிவாற்றினர்.