உடுமலை; வீடு மற்றும் பொது மின் இணைப்புகளுக்கு சிறப்பு பெயர்மாற்ற முகாம்

Tirupur News,Tirupur News Today- உடுமலை, பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் உள்ள வீட்டுமின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளுக்கு ஒரு மாதம் வரை, சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடக்கிறது.;

Update: 2023-07-27 06:42 GMT

Tirupur News,Tirupur News Today- உடுமலை மின்பகிர்மான வட்டத்தில், வீட்டுமின் இணைப்பு, பொது மின் இணைப்புகளுக்கு ஒரு மாதம் வரை சிறப்பு பெயர்மாற்ற முகாம் நடக்கிறது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் உள்ள வீட்டுமின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளுக்கு ஒரு மாதம் வரை சிறப்பு பெயர் மாற்றம் முகாம் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடக்க உள்ளது.

இதுகுறித்து, மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் இந்த பெயர் மாற்ற முகாம்கள் ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்கள் தவிர்த்து அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்தி மாற்றம் செய்து கொள்ளலாம். 

வளாகத்தில் விற்பனை காரணமாக பெயர் மாற்றம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள்

ஆதார் அட்டை, நகராட்சி மற்றும் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்துவரி ரசீது நகல்(அல்லது) விற்பனை பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல்(அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம்(பரிசு பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம் போன்றவை) அல்லது கோர்ட் உத்தரவு, நகராட்சி மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனை பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது)ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம் போன்றவை)அல்லது கோர்ட் உத்தரவு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள்

செட்டில்மெண்ட் பத்திரம் (அல்லது) பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்த சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.ஆதார் அட்டை, நகராட்சி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரிரசீது நகல் (அல்லது) உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல், நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்பட்டி ஐடி.,) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள்

பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவுச்சான்றிதழ் அல்லது வளாகம் அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, வீட்டு மின்இணைப்பு மற்றும் பொது மின்இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என, மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News