உடுமலை ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கல்யாணம்

உடுமலை, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

Update: 2021-11-08 07:00 GMT

உடுமலை, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் திருக்கல்யாண உற்சவத்தில், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ராமலிங்கர்– சவுடேஸ்வரி.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, பூமாலை வீதியில் உள்ள, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த மாதம், 27ம் தேதி, கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து விநாயகர், ராமலிங்க ஈஸ்வரர், முருகன், துர்க்கை, நவக்கிரக நாயகர்களின் சன்னதிகள் மற்றும் சவுடேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு மண்டலாபிசேக பூஜைகள் நடைபெற்று வந்தன.

இதன் தொடர்ச்சியாக, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த, ராமலிங்கர் – சவுடேஸ்வரி அம்மனை, திரளான பக்தர்கள் தரிசித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News