நிலங்களில் சோலார் பேனல்: விவசாயிகளுக்கு அழைப்பு
உடுமலையில் உள்ள விவசாயிகள் மத்தியில் சோலார் மின்னாற்றல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
பைல் படம்.
இதுகுறித்து உடுமலை ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது: இலவச விவசாய மின் இணைப்பு வைத்துள்ள விவசாயிகள், 11 கிலோ வாட் திறனுள்ள சோலார் விவசாய கட்டமைப்பு அமைக்க, 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதில், 60 சதவீதம், மத்திய, மாநில அரசுகளின் மானியமாக கிடைக்கும்.
ஐந்தாண்டுகளில், மின் வருவாய் மூலம், செலவை ஈடுகட்ட முடியும். பயன்பாடு போக, சோலார் வாயிலாக, கிடைத்த மின்சாரத்துக்கான தொகையை, மின்வாரியம் விவசாயிகளுக்கு வழங்கும். தமிழகத்தில், 20 ஆயிரம் சோலார் பேனல்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.