உடுமலை கல்லுாரியில் தனிமனித ஒழுக்கம் குறித்த கருத்தரங்கம்
உடுமலை கல்லூரியில் உன்னைப் போல் ஒருவன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.;
உடுமலை அந்தியூர், கமலம் கலை அறிவியல் கல்லுாரியில், ரோட்டரி சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. 'உன்னைப் போல் ஒருவன்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்லுாரி செயலர் சஞ்சீவ், முன்னிலை வகித்தார். முதல்வர் பிருந்தா, தலைமை வகித்தார். உடுமலை, தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்று, தனிமனித ஒழுக்கம் குறித்து விளக்கிப் பேசினர். மனநல மருத்துவர் விஜயகுமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதற்கான ஏற்பாடுகளை கமலம் கல்லுாரி ரோட்டரி கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.