இரண்டாவது முறை நிரம்பிய அமராவதி அணை: உபரிநீர் வெளியேற்றம்
அமராவதி அணை இரண்டாவது முறை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 54,637 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழையால், ஜூலை 23ல் அணை நிரம்பி, தொடர்ந்து மூன்று மாதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. வட கிழக்கு பருவமழை காரணமாக தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணை பாதுகாப்பு கருதி, உபரிநீர் ஆற்று மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, 90 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், 88 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு, 2,134 கன அடியாக இருந்தது.