உடுமலைப்பேட்டை அருகே மரக்கன்று நடும் விழா

உடுமலை அருகே வடுகபாளையம் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.;

Update: 2022-01-30 06:45 GMT

திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, குடிமங்கலம் ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சியில், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி, மரக்கன்று நடும் நிகழ்வு நடந்தது.

விழாவில் மண்ணுக்கேற்ற நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. மண்ணுக்கேற்ற மரம் வளர்ப்பு மூலம், வன வளம் பெருகும் என ஊராட்சி நிர்வாகத்தினர் கூறினர். ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News