திருமூர்த்தி அணைப்பகுதியில் ஆற்றில் அடித்து வரப்படும் கடமான்கள்
திருமூர்த்தி அணைப்பகுதியில், ஆற்றில் அடித்து வரப்படும் கடமான்கள், செத்து மிதக்கின்றன.;
உடுமலை, திருமூர்த்தி அணை, காண்டூர் கால்வாய் வழியாக அடித்து வரப்படும் மான் செத்து மிதக்கிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணைக்கு, பரம்பிக்குளம் அணையில் இருந்து, காண்டூர் கால்வாய் மூலம், தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. வனப்பகுதியை ஒட்டி வரும் தண்ணீரில், தண்ணீர் குடிக்க செல்லும் கடமான் உள்ளிட்ட விலங்கினங்கள் நீரில் சிக்கி, அடித்து வரப்படுகின்றன.
அதன்படி, கடந்த சில நாட்களில், ஆறு கடமான்கள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு, கரையோரம் கிடக்கின்றன. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.