முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணை
அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
உடுமலை சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக இருப்பது, அமராவதி அணை. அணையில் நிரம்பும் தண்ணீர் திறந்து விடப்படுவதன் மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள, 55,000 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுகிறது. தற்போது நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டு பருவமழை தேவைக்கேற்ப பெய்ததால், அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால், விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.