ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிேஷகம்

புகழ்பெற்ற ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா இன்று விமர்சையாக நடந்தது.

Update: 2021-10-27 11:30 GMT

திருப்பணி செய்யப்பட்ட, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்  திருக்கோவில் கோபுரம்.

உடுமலை பூமாலை வீதியில் உள்ள புகழ்பெற்ற, ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா விமர்சையாக நடந்தது.

பூமாலை வீதியில், விநாயகர், ராலிங்கேஸ்வரர், வள்ளி தெய்வானையோடு முருகன், கொற்றவை, 9 கோள்களுடன் ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், 100 ஆண்டு பழமையானது. பூஜை, வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பக்தர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, திருக்கோவில் கோபுரங்கள் புதிதாக வர்ணம் பூசப்பட்டு, புதிதாக மண்டபம் கட்டப்பட்டு, திருப்பணிகள் நடந்து முடிந்தன. தொடர்ச்சியாக, கடந்த மூன்று நாட்களாக நடந்த விழாவில், திருவிளக்கு பூஜை, புனிதநீர் வழிபாடு, வேள்வி நிறைவு ஆகியவை நடைபெற்றன. இன்று காலை, கும்பாபிேஷக விழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News