பெரியவளவாடி தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்

உடுமலை அருகே, பெரியவாடி ஆரம்ப சுகாதாரநிலையத்தில், தடுப்பூசி தொடர்பாக ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2021-06-13 14:09 GMT

உடுமலை அருகே பெரியவளவாடியில் தடுப்பூசி போடும் மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில், கடந்த ஐந்து நாட்களாக தடுப்பூசி இல்லாமல், ஊசிப்போடுவது நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் 2600,தடுப்பூசிகள் வந்ததை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.

உடுமலை அருகே பெரியவாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் காலை முதலேயே வந்தனர். ஏற்கனவே டோக்கன் பெற்றவர்கள்  முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிக் கொண்டிருந்தனர். அப்போது, டோக்கன் பெறாத சிலருக்கும், ஊழியர்கள் முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு, இதுபோல் நடக்காது என ஊழியர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.

Tags:    

Similar News