செயற்கை கால் பொருத்தும் சேவை: ரோட்டரி சங்கம் தாராளம்
உடுமலை ரோட்டரி சங்கத்தின் சார்பில், செயற்கை கால்கள் பொருத்தும் முகாம், உடுமலை ரோட்டரி இல்லத்தில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ரோட்டரி சங்கத்தின் சார்பில், செயற்கை கால்கள் பொருத்தும் முகாம், உடுமலை ரோட்டரி இல்லத்தில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், 71 தேர்ந்தெடுத்த பயனாளிகளுக்கு மூட்டுகள் மாற்றுவதற்கும், தேர்ந்தெடுத்த ஆறு பயனாளிகளுக்கு கால்கள் பொருத்துவதற்கும், மேலும், 3 காலிபர் மாற்றுவதற்கும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, மாற்று பயன்பாட்டு உறுப்புகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.