உடுமலை அருகே தனியார் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

உடுமலை அருகே தனியார் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Update: 2022-03-30 13:30 GMT

அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது. இக்கல்லுாரிக்கும், கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், கமலம் கல்லுாரி செயலாளர் சஞ்சீவ், முதல்வர் பிருந்தா, கிருஷ்ணம்மாள், கல்லுாரி செயலாளர் யசோதா தேவி, முதல்வர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர். பின், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் வாயிலாக, மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கான திறன் மேம்பாடு, ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு வகுப்புகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுதல், விவசாயம் சார்ந்த பொருட்களை உருவாக்குதல், அடைகாக்கும் கருவி பயன்பாடு என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. நிகழ்ச்சியில், கல்லுாரி இயக்குனர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News