கோட்டமங்கலம் பகுதியில் நாளை மின்தடை
Tirupur News- கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today-உடுமலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க உள்ளது. எனவே அதுசமயம் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அப்போது மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
தாராபுரம்
கொக்கம்பாளையம் மின்நுகர்வோர் செப்டம்பர் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் என்று, தாராபுரம் மின்வாரிய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது,
தாராபுரம் கோட்டத்தில் வடக்கு குண்டடம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட கொக்கம்பாளையம் மின் பகிர்மானத்திற்கு நிர்வாகக் காரணத்தினால் 11/2023 நவம்பர் மாத மின் கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ள இயலவில்லை.
ஆகவே மின்நுகர்வோர் 9/2023 செப்டம்பர் மாதம் கட்டிய மின்கட்டணத்தொகையையே நவம்பர் மாதத்திற்கு செலுத்த வேண்டும். மின் பயனீட்டாளர்கள் சென்ற மாத கணக்கீட்டு தேதியை இம்மாத தேதியாக எடுத்துக்கொண்டு அந்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் பணத்தை மின் வாரியத்திற்கு செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறது.தவறும் பட்சத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மின் விநியோகம் துண்டிப்பு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.