உடுமலை பகுதியில் பாராமரிப்பு பணிக்காக நாளை மின் வினியோகம் நிறுத்தம்

உடுமலை பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிக்காக நாளை (7ம் தேதி) மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-01-06 13:00 GMT

திருப்பூர் மாவட்டம், உடுமலை துணைமின் நிலையம் பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (7ம் தேதி) மின் வினியோகம் இருக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை உடுமலை நகரம், பழனி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலூர், கணபதிபாளையம், வெனஸ்பட்டி, தொட்டம்பட்டி, பொட்டையம்பாளையம், பொட்டி நாயக்கனூர், புக்குளம், குறிஞ்சேரி, சீன்னவீரம்பட்டி, வெள்ளியம்பாளையம், பொன்னேரி, கோட்டமங்கலம், சங்கர்நகர், அய்யம்பாளையம் புதூர், காந்திநகர், சிந்துநகர், ஸ்ரீராம் நகர், ஜீவா நகர், அரசு கலைக்கல்லூரி பகுதி, போடிபட்டி, பள்ளபாளையம், அங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை மின்வினியோகம் இருக்காது என, செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News