பெட்ரோல், டீசல் விலை உயர்வு: உடுமலையில் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் முன், இ.கம்யூ., அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விலை உயர்வால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், விளக்கப்பட்டது. அரசு நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், பெருமன்ற தலைவர் ராம்குமார், செயலாளர் ராகுல், அருண் ராம்குமார், ஹாரூன், இ.கம்யூ., செயலாளர் ரணதேவ், சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.