பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி உடுமலையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-06-08 06:34 GMT
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி  உடுமலையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • whatsapp icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் , திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியகோட்டைபிரிவு, வெஞ்சமடை, கணேசபுரம், எஸ்.வி.புரம் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்பெற கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், ஜிஎஸ்டி நிலுவை தொகையை தமிழகத்திற்கு வழங்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பு ஊசி தொழிற்சாலையில் உற்பத்தியை துவங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும், ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News