உடுமலை அருகே வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க பரண்: விவசாயிகள் கண்காணிப்பு

உடுமலை வனப்பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, விவசாயிகள் பரண் அமைத்துள்ளனர்.

Update: 2021-12-10 06:00 GMT

உடுமலை வனப்பகுதிகளில் பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க விவசாயிகள் பரண் அமைத்துள்ளனர்.

உடுமலை வனப்பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, விவசாயிகள் பரண் அமைத்துள்ளனர்.

உடுமலை வனப்பகுதியில், மலைவாழ் மக்கள் பலர் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவ்வப்போது வன விலங்குகள் பயிர்களை நாசம் செய்து விடுவதால், அவர்கள் இழப்பை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, கூட்டமாக வரும் யானைகள், பயிர்களை அதிகளவு சேதப்படுத்தி விடுகின்றன.

இதற்கிடையில், விளைநிலங்களில் வன விலங்குகள் நுழைவை கண்காணித்து விரட்ட, ஆங்காங்கே பரண் அமைத்துள்ளனர். உயரமான மற்றும் உறுதியான மரங்களில் மூங்கில் மற்றும் இலைகளை கொண்டு பரண் அமைத்து, இரவு நேரங்களில் அதன் மீது அமர்ந்து கண்காணிக்கின்றனர்.

Tags:    

Similar News