இனி, பஞ்சலிங்க அருவியில் குளிக்கலாம்! 2 ஆண்டுக்கு பின் அனுமதி
உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.;
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டாக கொரோனா தொற்றுப்பரவலால், குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, தடை நீக்கி, அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் பலரும், அருவியில் குளிக்க ஆர்வம் காட்டினர். இருப்பினும், தொற்று பரவலை மனதில் வைத்து, மக்கள் செயல்பட வேண்டும் என, அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.