உடுமலை அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு

உடுமலையில், தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தில் நடந்த பணிகள் குறித்து, குடும்ப நலம் மற்றும் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்

Update: 2022-04-25 07:00 GMT

தமிழகத்தில் தேசிய சுகாதார திட்டத்தில், பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் நவீன ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை கருவிகள், உடல் பரிசோதனை கருவிகளும், படுக்கை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, டில்லியில் உள்ள குடும்ப நல மற்றும் நல்வாழ்வுத்துறையினர், அவ்வப்போது ஆய்வு நடத்தி உறுதியும் செய்கின்றனர்.

அவ்வகையில், மத்திய குடும்ப நல மற்றும் நல்வாழ்வுத்துறை இணைச் செயலாளர் சித்திக்கர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், உடுமலை அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். அரசு மருத்துவமனைகளில் 'சீமாங்' பிரிவில் வாங்கப்பட்டுள்ள கருவிகள், வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா, தலைமை மருத்துவர் உமாமகேஸ்வரி, 'சீமாங்' பிரிவு டாக்டர் (பொறுப்பு) ரோஷன் சுலைகா பர்வீன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News