விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

உடுமலையில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.;

Update: 2021-11-22 12:00 GMT

பைல் படம்.

உடுமலை வட்டாரத்தில், 50க்கும் மேற்பட்ட தனியார் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றை, கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். அவர் கூறுகையில்,'' உரிமம் பெற்று விற்பனை செய்யும் அனைத்து விதை விற்பனையாளர்களும், கொள்முதலின் போது, தேர்ச்சி பெற்ற விதை முளைப்புத்திறன் அறிக்கையுடன், விதை வாங்க வேண்டும். ஒவ்வொரு தனியார் விதை உற்பத்தியாளர்களும், தங்களின் விதை ரகங்களுக்கு, விதைச்சான்று இயக்குனர் அலுவலகத்தில், பதிவு எண் பெறுவது அவசியம். பதிவு எண், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல், விற்பனை செய்தால், விதைச்சட்டத்தின் படி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை நிலையங்களில், காலாவதியான விதை குவியல்களை, தனி பதிவேட்டில் பதிவு செய்து, தனியாக பராமரிக்க வேண்டும்' என்பது போன்ற அறிவுரைகளை வழங்கினார்.

Tags:    

Similar News