திருப்பூரில் தடுப்பூசி செலுத்த வட மாநிலத்தவர் ஆர்வம்

பஸ் ஸ்டாண்டில், தடுப்பூசி செலுத்தும் முகாமில், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.;

Update: 2021-11-29 05:30 GMT

பஸ் ஸ்டாண்டில் நடக்கும்  தடுப்பூசி சிறப்பு முகாமில் வட மாநிலத்தவர், தடுப்பூசி செலுத்தி கொள்ள  ஆர்வம் காட்டுகின்றனர். 

உடுமலை, அவினாசி உள்ளிட்ட பல இடங்களில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. பிற மாவட்டம் மற்றும் வெளியூர் பயணிகள், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் வந்து செல்லும், பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது. இதில், ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக, நகரின் பிற மையங்களில் நடக்கும் தடுப்பூசி முகாமை விட, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடக்கும் முகாமில், அதிகளவிலான மக்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News