வேண்டாமே பிளாஸ்டிக்... மீண்டும் விழிப்புணர்வு ஆரம்பம்

உடுமலை நகராட்சி பகுதியில், பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-12-20 13:30 GMT

உடுமலை நகராட்சி சார்பில் கடைகளில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் அறிவுறுத்தல்படி, நகர பகுதி முழுக்க, மண் வளத்தை மலடாக்கும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நகர்நல அலுவலர் கவுரி சரவணன் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் கடை, கடையாக சென்று, பிளாஸ்டிக் கவர், தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என, அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், நகர சுகாதார ஆய்வாளர் செல்வம், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று, கடைக்காரர்கள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News