கொசுத் தொல்லை அதிகம்: மருந்து தெளிக்கும் பணி துவக்கம்
உடுமலையில் உள்ள அரசு அலுவலகங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.;
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், கொசுத்தொல்லை அதிகரித்திருக்கிறது. எனவே, கொசு மருந்து தெளிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு மாணவியர் விடுதி, காவலர் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் அறிவுறுத்தல் படி, நகராட்சி வாகனத்தில், கொசு மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.