போலீசாரிடம் சிக்கிய மொபட் திருடன்; 13 வாகனங்கள் மீட்பு

திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில், 13 மொபட்டுகளை திருடிய நபரை உடுமலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-11 02:32 GMT

உடுமலை போலீசாரால் மீட்கப்பட்ட வாகனங்கள். 

வணிக வளாகங்கள், மதுக்கடைகள் மற்றும் வீடுகளின் முன் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போனது. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் உடுமலை டிஎஸ்பி தேன்மொழிவேல் தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

திருட்டு நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தடயங்களை சேகரித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் முக்கிய இடங்களில் வாகன சோதனை நடத்தினர்.

இதில் வாகன திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் பழனி, தாத்தநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுலைமான் (வயது 58) பிடிபட்டார். அவரிடமிருந்து 12 மொபட்டுகள் மற்றும் ஒரு ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் 2 மொபட்டுகள் பழனி போலீஸ் நிலைய எல்லையிலும், 2 மொபட்டுகள் மடத்துக்குளம் பகுதியிலும், 2 மொபட்டுகள் உடுமலை பகுதியிலும், 1 மொபட் பல்லடம் பகுதியிலும் திருடப்பட்டது தெரிய வந்தது. மீட்கப்பட்ட வாகனங்கள்  விசாரணைக்கு பிறகு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என, போலீசார் கூறினர்.

Similar News