உடுமலையில் ஆகஸ்ட் 13ல், மினி மாரத்தான் போட்டி

Tirupur News,Tirupur News Today- சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 13ம் தேதி, உடுமலையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.;

Update: 2023-07-29 13:38 GMT

Tirupur News,Tirupur News Today- சுதந்திர தினவிழாவையொட்டி, உடுமலையில் வரும் ஆக., 13ல் மினி மராத்தான் போட்டி நடத்தப்படுகிறது (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மினி மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.

உடுமலை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம், லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி மற்றும் உடுமலை லேப் அண்ட் எக்ஸ்ரேஸ் பிரியா நர்சிங் கல்லூரி ஆகியவை சார்பில் போதைப்பொருள் நெகிழி ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்கான மினி மாரத்தான் போட்டி வருகிற ஆகஸ்ட் 13 -ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 8 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உடுமலை இராகல்பாவி பிரிவு முதல் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள பதிவு கட்டணம் ரூ. 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதிவு கட்டணத் தொகை புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, மருத்துவ செலவுக்காக அளிக்கப்படுகிறது.

உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள உடுமலை லேப் அண்ட் எக்ஸ் ரேஸ்சில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது. 9865275123 , 830056811 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். தவிர பள்ளி கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு 8.8.23 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு நிறைவடைகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் வெற்றி பெறுபவருக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது

போட்டிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, பொருளாளர் சிவகுமார் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் நாயப் சுபேதார் நடராஜ். ஏ.ஒய்.கான், லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் செல்வராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News