அணை நீர்மட்டத்தை அளவிட 'சென்சார்' உபகரணம்

உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டத்தை அளவிட, நவீன உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.;

Update: 2021-11-12 06:00 GMT

உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டத்தை அறிய பொருத்தப்பட்டுள்ள சென்சார் உபகரணம். 

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், திருப்பூர், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, 55,000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. 90 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர், முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் நீர்மட்டத்தை துல்லியமாக கணக்கிட, சென்சார் மூலம் இயங்கும் நவீன உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

'இதன்மூலம், துல்லியமான முறையில் நீர் மேலாண்மை செய்ய முடியும். சென்சார் கருவியில் பதிவாகும் நீர்மட்ட விவரம், அதிகாரிகளின் 'மொபைல்' எண்ணுக்கு வந்துவிடும். இதன்மூலம், நேரடியாக அணைக்கு சென்று, நீர்மட்டத்தை பார்வையிட வேண்டிய அவசியம் இருக்காது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News