மடத்துக்குளம் சிறப்பு மருத்துவ முகாமில் திரளானோர் பங்கேற்பு
மடத்துக்குளத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.;
உடுமலை, மடத்துக்குளம் பேரூராட்சியில், 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ஜெயராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பொது மருத்துவம் துவங்கி, அனைத்து வகை மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கும், சிலர் பரிந்துரைக்கப்பட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் இம்முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர். மடத்துக்குளம் வட்டார மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர், முகாம் பணிகளில் ஈடுபட்டனர்.