உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்

உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழாவின் போது மாவிளக்கு, பூவோடு எடுத்து, உருவாரங்கள் வைத்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

Update: 2022-04-21 01:45 GMT

கோப்பு படம் 

உடுமலையின் காவல் தெய்வமாக போற்றப்படும் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும், நோன்பு சாட்டியதும், பக்தர்கள் பல்வேறு வழிகளில், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

நோய்களில் இருந்து தன்னை காத்தருளிய அம்மனுக்கு, பச்சரிசியில் மாவிட்டு, விளக்கேற்றி, மனமுருக வேண்டி மாவிளக்கு படைக்கின்றனர்.இதே போல், நெருப்பில், அம்மன் வெளிவந்தவள் என்பதை நினைவூட்டும் விதமாக, பூவோடு எடுக்கின்றனர்.

விவசாய பூமியில், செழிப்புக்கு காரணமான இறைவனுக்கு, அத்தகைய பசுமை செழிப்பையே அர்ப்பணிப்பது போல, அம்மன் திருவடிகளில், சமர்ப்பிக்கும் வகையில், முளைப்பாலிகையிட்டு ஊர்வலமாக எடுத்து வருகின்றனர்

திருவிழாவின்போது, உப்பிடுவது எதிலிருந்து தோன்றியதோ, அதிலேயே கரைவது என்பதை வலியுறுத்தும் தத்துவமேயாகும். வேண்டுதலுக்கு ஏற்ப உருவார மண் பொம்மைகளையும், கண் மலர் சாற்றியும் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

Tags:    

Similar News