உடுமலை; பொங்கல் பானைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்

Tirupur News- திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் பொங்கல் பானை உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2024-01-01 07:33 GMT

Tirupur News- பொங்கல் பானைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- தமிழா்களின் பாரம்பரியம்,பண்பாட்டை வெளிப்படுத்தும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது அரிசி, வெல்லம், நெய் சேர்த்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் படைத்து கொண்டாடுவது தமிழா்களின் மரபாகும்.


பொங்கல் கொண்டாட்டம் 

புதிய அடுப்பில், புது மண் பானையில், புத்தரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை சேர்த்து சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரியனை வணங்கி பொங்கல் கொண்டாடுவார்கள். சாதாரண மண் பானைகளைப்போல் அல்லாமல், பொங்கல் பானைகள் கூடுதல் கவனத்துடன் தயாரிக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்காக, 1 கிலோ முதல் 5 கிலோ அரிசி வரை வேகும் அளவில் பானைகள் தயாரிக்கப்படுகின்றன.

பொங்கல் பானை தயாரிப்பு

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பானைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.கார்த்திகை மாதம் 2ம் வாரத்திலிருந்து பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

பானைகள் ரூ. 70 முதல் ரூ.200 வரை பல்வேறு விலைகளிலும் தயாரிக்கப்படுகின்றன. வண்ணங்களுடன் கூடிய சீதனப் பானைகள் ரூ.700 வரை விற்பனையாகின்றன.பொங்கல் பானைகளை வாங்கும்போது மூன்று பக்கமும் சுண்டிப் பார்த்து வாங்க வேண்டும். அப்போது ஒரே மாதிரியான ஒலி வர வேண்டும். மேலும், பானையின் உள்புறமாக பார்த்தும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

ஜனவரி 1 முதல் 10 வரை பொங்கல் பானை உற்பத்தி அதிகளவில் இருக்கும். நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தாமதமாக பெய்துவருவதால் மண்பாண்டங்களைக் காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பிற மாநில விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பானை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.


முன்னோர்கள் காலத்தில் இருந்தே புதிய பானையில் பொங்கலிடுவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் மண்பானைகள் தயாரிக்கும் பணி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

மண் பானையில் செய்யப்படும் பொங்கல் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்பதால் மண்பானைகளும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனால் வியாபாரம் அதிகரிக்கும் என்பதால் மண்பானை உற்பத்தி செய்வதில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான கரும்பு, பச்சரிசி, சக்கரை உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி வருகின்றது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும். இதனால் மண்பானை தொழில் மேம்படும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News