உடுமலை கல்லூரியில் மொழி ஆய்வகம் திறப்பு

உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட மொழி ஆய்வகம் தொடக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது .;

Update: 2021-12-11 16:15 GMT

உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட மொழி ஆய்வகம் துவக்கி வைக்கப்பட்டது.

உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட மொழி ஆய்வகம் தொடக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது . கல்லூரி முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் பத்மாவதி, நிர்வாக அறங்காவலர் விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவீனமயமாக்கப்பட்ட இந்த மொழி ஆய்வகத்தில் மாணவர்களுக்கும் தேவையான மொழி ஆளுமை தனித் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படும். வளர்ந்து வரும் தலைமுறைகளுக்கு ஏற்ற கல்வி எளிய வழியில் கற்பிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News