புதிய வாக்காளர்களாக இணைய 1,970 பேர் விருப்பம்
உடுமலை வருவாய் கோட்டத்தில், புதிய வாக்காளர்களாக இணைய 1,970 பேர் விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.;
உடுமலை வருவாய் கோட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர், சேர்த்தல் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம், கடந்த, 13, 14 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில், உடுமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள, 294 ஓட்டுச்சாவடிகளில், சிறப்பு முகாம் நடந்தது. இந்த இரண்டு நாட்களில், 1,970 பேர் புதிய வாக்காளர்களாக இணைய, விண்ணப்பம் வழங்கியுள்ளனர். அடுத்தடுத்து நடத்தப்பட உள்ள சிறப்பு முகாமில், அதிகளவு புதிய வாக்காளர்கள் இணைவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.