உடுமலை நகராட்சி பகுதியில் மலேரியா தடுப்பு பணி தீவிரம்
உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மலேரியா தடுப்பு முன்னெச்சரிக்கை பணி மேற்கொள்ளப்பட்டது.;
திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சிக்குட்பட்ட முனிவர் நகர் பழனியாண்டவர் நகர் சங்கர் லே அவுட், மஸ்தான் லே அவுட், ராமசாமி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில், நகராட்சி தூய்மை பணியாளர்கள், கொசு மருந்து அடிக்கும் வாகனம் மூலம், கொசு மருந்து தெளித்தனர். டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சலை தடுக்கும் விதமாக, இப்பணி மேற்கொள்ளப்படுகிறது என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.