உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கெளசல் கிஷோர் ஆய்வு
Manager Memes Tamil- திருப்பூர் மாவட்டம், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கெளசல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார்.;
Tirupur News,Tirupur News Today- உடுமலைப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் (கோப்பு படம்)
Manager Memes Tamil-ஒடிசா மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்தைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தின் சார்பில், கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தென்னக ரயில்வே சார்பில் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது
அதன் ஒரு பகுதியாக தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிக்னல்கள் சரியான முறையில் செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தார். பின்னர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, இருசக்கர வாகன நிறுத்துமிடம், டிக்கெட்டுகள் வழங்குவதையும் ஆய்வு செய்தார். அத்துடன் பயணிகளிடம் ரயில் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
அப்போது உடுமலை மற்றும் பொள்ளாச்சி பயணிகள் ரயில் நலச்சங்கங்கள் சார்பில் கூடுதல் பொது மேலாளர் கெளசல் கிஷோரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், உடுமலை வழியாக கோவை திருச்சி சென்னை செல்வதற்கு புதிய ரயில் இயக்க வேண்டும். அதே போன்று உடுமலை மதுரை வழியாக மேட்டுப்பாளையம் தூத்துக்குடிக்கு செல்வதற்கு ரயில் இயக்க வேண்டும். பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் பாதையில் மீட்டர் கேஜ் ரயில்கள் இயங்கிய போது இருந்த கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் அமைக்க வேண்டும். உடுமலை உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய தேவையான நிலத்தை ரயில்வே துறையிடம் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தது.
மனுவைப் பெற்றுக் கொண்ட ரயில்வே அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2