பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Tirupur News,Tirupur News Today-பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்கின்றனர்.;

Update: 2023-07-07 10:43 GMT

Tirupur News,Tirupur News Today- பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, தண்ணீர் கொட்டுகிறது.

Tirupur News,Tirupur News Today-  திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இது தவிர திருமூர்த்தி அணை வண்ண மீன் காட்சியகத்தை பார்வையிடவும் பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படும். டிசம்பர் மாதம் வரை நீர்வரத்து அதிகமாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறைந்து விடும். கடந்த 2 மாதமாக தண்ணீரின்றி அணை வறண்டு கிடந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளதால் கடந்த சில தினங்களாக திருமூர்த்தி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர். நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குளிக்க தடை விதிக்கப்படும்.

வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அடிவாரத்தில் உள்ள அமண லிங்கேஸ்வரர் கோவில் மண்டபத்தை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடி திருமூர்த்தி அணையில் சென்று கலக்கும். வெள்ள அபாயத்தை அறிவிக்கும் வகையில் அப்பகுதியில் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. மலையின் மீது கருமேகங்கள் திரண்டாலே கனமழையை கணித்து அருவிப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர்.

Tags:    

Similar News