உடுமலைபேட்டை அரசு பள்ளியில் சட்ட வரைவு தினவிழா

அரசுப்பள்ளியில், இந்திய அரசியலமைப்பு தினவிழா கொண்டாடப்பட்டது.;

Update: 2021-11-27 12:30 GMT

உடுமலை பூலங்கிணறு, அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட வரைவு நாள், உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர்.

அரசுப்பள்ளியில், இந்திய அரசியலமைப்பு தினவிழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக உடுமலை, பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில், இந்திய அரசியலமைப்பு தினவிழா கொண்டாடப்பட்டது. அறிவியல் ஆசிரியர் ஜான்பாஷா வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியர் கண்ணகி, தலைமை வகித்தார்.

நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன், என்.எஸ்.எஸ்., திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். 'வல்லரசு இந்தியா' என்ற தலைப்பில், முதுகலை பொருளியல் ஆசிரியர் தேவிகா, பேசினார். பின், மாணவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றுவோம் என, உறுதிமொழி ஏற்றனர்.

Tags:    

Similar News