பீட்ரூட் சாகுபடியில் உடுமலை பகுதி விவசாயிகள் தீவிரம்

உடுமலை சுற்று வட்டார பகுதியில் பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

Update: 2021-04-24 13:33 GMT

உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் அமராவதி, திருமூர்த்தி அணைகள் பாசனம் மற்றும் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் விவசாய சாகுபடி நடக்கிறது. தென்னை வாழை கரும்பு நெல் சப்போட்டா மா போன்ற பயிர்களும் கத்தரி வெண்டை, அவரை தக்காளி பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் கீரை வகைகளும் மானாவாரியாக கம்பு சோளம் உளுந்து எள் போன்ற தானியங்களும் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பெய்து வருவதால், நடப்பு பருவத்துக்கு திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமராவதி அணை பாசனத்தில் தற்போது 2-ம் போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமூர்த்தி அணையின் 3ம் மண்டல பாசனத்தில் தக்காளி, பீட்ரூட் அவரை போன்ற காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடுமலை சுற்று வட்டாரப்பகுதியில் பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இம்முறை பீட்ரூட் சாகுபடி கைகொடுக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News